அரியலூர் பேருந்து நிலையத்தில் ஏடிஎம் மையம் அமைக்க கோரிக்கை
அக்டோபர் : 25 :
அரியலூர் பேருந்து நிலையத்தில் ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜுடம், அக்கட்சியின் மாநில விவசாய அணிச் செயலர் எஸ்.ஆர். அம்பேத்கர் வழியன் அளித்த கோரிக்கை மனு:
மாவட்ட தலைநகராக அரியலூர் அறிவிக்கப்பட்டதில் இருந்தும், இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் காரணமாகவும் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துச் செல்கின்றனர். இவர்களின் அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டால் ஏடிஎம் மையத்தையோ, வங்கியையோ தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஏடிஎம்மிற்காக பேருந்து நிலையத்தில் திருச்சி சாலைக்கு செல்ல வேண்டும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நிலையை அறிந்து பேருந்து நிலையத்தில் ஏடிஎம் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.