வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
அக்டோபர் 24 :
அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், மேல்நிலை தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும்.எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 30.09.2016 அன்று 45 வயதுக்குள்ளும் இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். தொலைதூர கல்வி பயிலுபவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.
பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் 30.11.2016-க்குள் முற்பகலில் வேலை நாட்களில் நேரில் புதிய விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.