மாற்றுத் திறனாளிகள் கவனத்துக்கு....

அக்டோபர் 25 : 

அரியலூர் மாவட்டத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் பெற முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிப்பு தொடர்பாக மருத்துவ சான்று மற்றும் முதுகு தண்டுவடம் பாதிப்பினால் கழுத்து வரை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடுப்புக்குக்கீழ் செயல் இழந்தவர்கள் அதற்குரிய மருத்துவ சான்று மற்றும் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல் மற்றும் 3 புகைப்படத்துடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைதளம், அறை எண் 17, ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர் என்ற முகவரிக்கு வரும் 31}ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Translate