அரியலூர் அருகே, இடி தாக்கியதில் வீடு மற்றும் தென்னை மரங்கள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்: அரியலூர் அருகே, இடி தாக்கியதில் வீடு மற்றும் தென்னை மரங்கள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், நேற்று மாலை, 5:00 மணியளவில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, செந்துறை கிராமத்தில், ஒரு தென்னை மரத்தில் இடி தாக்கியதில், மரம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த செந்துறை தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இதேபோல், 5:30 மணியளவில், ஜெயங்கொண்டத்தில் ஒரு தென்னை மரம் இடி தாக்கி எரிந்தது. ஜெயங்கொண்டம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.இடையக்குறிச்சியில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் இடி தாக்கியதில், அருகில் இருந்த அவரது கூரை வீடும் தீப்பிடித்து எரிந்தது. பொதுமக்கள், உடனடியாக தீயை அணைத்தனர்.